முகப்பு
செய்திகள்

திரைப்படமாக ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்! புதிய முயற்சி!

நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடர், திரைப்படம் போல இரண்டரை மணிநேரத்துக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 11:26 AM
நெஞ்சத்தைக் கிள்ளாதே - இன்ஸ்டாகிராம்
பகிர்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடர், திரைப்படம் போல இரண்டரை மணிநேரத்துக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

சினிமாவில் வருவதைப்போல அந்த இரண்டரை மணிநேரத்தில் காதல், பாசம், வில்லன், மிரட்டல், பிரிவு என அனைத்துவிதமான உணர்வுகளையும் தொடரில் வெளிப்படுத்தவுள்ளனர்.

சின்னத்திரை தொடர்கள் வார இறுதி நாள்களில் ஒரு மணிநேரம் விளம்பர இடைவேளை இல்லாமல் ஒளிபரப்பாவது வாடிக்கையானது. தொடரின் விறுவிறுப்பைக் கூட்டவும், வார இறுதி நாள்களில் வீட்டில் உள்ள புதிய ரசிகர்களைக் கவரும் வகையிலும் இவ்வாறு ஒளிபரப்பப்படும்.

Advertisement

ஆனால், திரைப்படம் போல அனைத்து உணர்வுகளையும் ரசிகர்கள் அனுபவிக்கும் வகையில் இரண்டரை மணிநேரத்துக்கு நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இதனால் சின்னத்திரையில் புதிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

ஜெய் ஆகாஷ் - ரேஷ்மா முரளிதரன் - இன்ஸ்டாகிராம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிவரும் தொடர் நெஞ்சத்தைக் கிள்ளாதே. இந்தத் தொடரில் நடிகர் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ரேஷ்மா முரளிதரன் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நாயகனாக நடித்த ஜெய் ஆகாஷ் கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு நீதானே என் பொன்வசந்தம் தொடரில் நாயகனாக நடித்திருந்தார்.

இதேபோன்று பூவே பூச்சூடவா, அபி டெய்லர், கிழக்கு வாசல் உள்ளிட்ட தொடர்களில் நடித்த ரேஷ்மா நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரில் நடித்து வருகிறார்.

படிக்க | பிக் பாஸ் கண்டு அஞ்சத் தேவையில்லை: முன்னாள் போட்டியாளர் அர்ச்சனா!

நெஞ்சத்தைக் கிள்ளாதே ஸ்பெஷல் காட்சிகள் - யூடியூப்

இருவரும் சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளதால், நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடர் ஆரம்பம் முதலே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தத் தொடர் சினிமா ஒளிபரப்பாவதைப் போன்று இரண்டரை மணிநேரத்துக்கு ஒளிபரப்பாகவுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 29) பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.

சினிமாவில் வருவதைப்போல அந்த இரண்டரை மணிநேரத்தில் காதல், பாசம், வில்லன், மிரட்டல், பிரிவு என அனைத்துவிதமான உணர்வுகளையும் தொடரில் வெளிப்படுத்தவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments