முகப்பு
குழந்தைகள் உலகம்

கண்போல கல்விச்சாலை

Updated On : 21 மார்ச், 2026 at 6:30 PM
பகிர்:

எண்ணம் போல

ஆடிக்களித்த

காலம் முடிந்தது!

-

கண்ணைப்போன்றக்

கல்விச்சாலை

திரும்பப்போகிறோம்!

-

உள்ளம் மகிழ

உயர்ந்த வகுப்பில்

அமரப்போகிறோம்!

-

புதிய புதிய

பாடப்பகுதி

பயிலப்போகிறோம்!

-

கற்பதில் மட்டும்

கவனம் கொண்டு

தேரப்போகிறோம்!

-

உற்ற கல்வியால்

அறிவும் ஒழுக்கமும்

அடையப்போகிறோம்!

-

அறிவும் ஒழுக்கமும்

எமது கண்ணென

என்றும் எண்ணுவோம்!

-

அவற்றை எமக்கு

அளித்த பள்ளியை

என்றும் போற்றுவோம்!

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.