நடிகர் அஜித் குமார் 
செய்திகள்

மீண்டும் களத்தில் இறங்கிய அஜித் குமார்!

நடிகர் அஜித் குமார் கார் ஓட்டும் விடியோ வைரலாகி வருகிறது.

DIN

நடிகராக இருந்தாலும் கார் ரேஸிங்கில் ஆர்வம் உடையவர் அஜித் குமார். நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் கார் ரேஸிங்கில் இறங்கியுள்ளார்.

பிரிட்டனில் நடைபெறும் ஜிடி4 ஐரோப்பியன் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொள்ள அஜித் துபாயில் பயிற்சி செய்து வருகிறார்.

கார், பைக்குகள் மீது தீவிர ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார்.

துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூலை மாதம் தான் ரூ. 9 கோடி மதிப்புள்ள ஃபெராரி கார் ஒன்றினை வாங்கினார். 

சமீபத்தில் போர்ஷே ஜிடி3 வகை கார் வாங்கினார் அஜித். இந்தக் காரின் விலை சுமார் ரூ.4 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சி படத்துடன் குட் பேட் அக்லி படத்திலும் அஜித் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அஜித் பாதுகாப்பு உபகரணங்களுடன் பயிற்சி மேற்கொள்ளும் விடியோ வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

SCROLL FOR NEXT