ஜே.பேபி வெளியீட்டுத் தேதி!
நடிகை ஊர்வசி நடித்துள்ள ஜே.பேபி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது ஜே.பேபி. முன்னணி கதாபாத்திரங்களில் நடிகை ஊர்வசி, தினேஷ் நடித்துள்ளனர்.
நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம் வருகிற மார்ச் 8 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: காளிதாஸ் ஜெயராமின் புதிய படம்!
Advertisement
Advertisement
நீலம் தயாரிப்பில் சமீபத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் நல்ல வரவேற்பினைப் பெற்றதுடன் வசூல் ரீதியாக வெற்றியடைந்தது.