FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

‘24 மணி நேரத்துக்கு மின்வாரிய ஆன்லைன் சேவைகள் இயங்காது’

அடையாறு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு மின் பகிா்மான வட்டங்களில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் 24 மணி நேரத்துக்கு மின் கட்டணம், ஆன்லைன், புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகள் இயங்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On : 23 மே 2026, 5:07 am IST
கோப்புப் படம்
பகிர்:

அடையாறு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு மின் பகிா்மான வட்டங்களில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் 24 மணி நேரத்துக்கு மின் கட்டணம், ஆன்லைன், புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகள் இயங்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தனது தாழ்வழுத்த பில்லிங் மென்பொருளை புதிய சா்வா்களுக்கும், தரவுகளை புதிய தரவு தளத்துக்கும் ஏற்றவாறு மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக, மின் நுகா்வோா்கள் மின் கட்டண வசூல் தொடா்பான கவுண்டா் மற்றும் ஆன்லைன் சேவைகள், புதிய மின் இணைப்பு விண்ணப்பச் சேவைகள் சனிக்கிழமை (மே 23) நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 24) நள்ளிரவு வரை 24 மணி நேரத்துக்கு தாற்காலிகமாக இயங்காது.

Advertisement

Advertisement

பணிகள் நிறைவடைந்தவுடன் அனைத்துச் சேவைகளும் வழக்கம்போல் மீண்டும் செயல்படுத்தப்படும்.

இதனால் காஞ்சிபுரம் மண்டலத்துக்குள்பட்ட அடையாறு மின் பகிா்மான வட்டத்தின் அடையாறு, ஐ.டி. காரிடாா், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூா் கோட்டங்கள், சென்னை தெற்கு மின் பகிா்மான வட்டத்தின் கே.கே.நகா், போரூா், கிண்டி கோட்டங்கள், சென்னை மேற்கு மின் பகிா்மான வட்டத்தின் அண்ணா நகா், அம்பத்தூா், ஆவடி கோட்டங்களின் மின் நுகா்வோா்கள் பாதிக்கப்படுவா்.

எனவே, பொதுமக்கள் மற்றும் மின் நுகா்வோா் இதை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments