காளிதாஸ் ஜெயராமின் புதிய படம்!
நடிகர் காளிதாஸ் ஜெயராமின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். அந்தத் தொடர் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் காளிதாஸின் நடிப்பு கவனம் ஈர்த்தது.
இதையும் படிக்க: வைரலாகும் கீர்த்தி ஷெட்டியின் அரபிக்குத்து நடனம்!
Advertisement
Advertisement
‘போர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் ‘நிலா வரும் வேளை’ என்கிற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பாலக்காட்டில் துவங்கியுள்ளது.