வேட்டையன் படப்பிடிப்பு 80% முடிவடைந்தது: நடிகர் ரஜினி தகவல்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக ரஜினியே தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் படத்தின் வெற்றியைதைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: யாமி கௌதமின் கணவர் மிகவும் நேர்மையானவர்: கங்கனா ரணாவத் புகழாரம்!
Advertisement
Advertisement
தூத்துக்குடி மற்றும் சென்னையில் படப்பிடிப்புகள் நடந்த முடிந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
லால் சலாம் திரைப்படம் மக்களுக்கு பிடித்துள்ளதாக சொல்கிறார்கள். மிகப் பெரிய வெற்றியடைந்திருந்திருக்கிறது. இதனைத் தயாரித்த லைகா புரடக்ஷனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் வாழ்த்துகள். லால் சலாம் படக்குழுவுக்கும் வாழ்த்துகள். வேட்டையன் படம் 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. 20 சதவிகிதம் இன்னும் மீதமிருக்கிறது. அடுத்தப்படம் லோகேஷின் படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாமென ரஜினி கூறினார்.