முகப்பு
செய்திகள்

கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ போஸ்டர்!

நடிகை கயல் ஆனந்தியின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 11 பிப்ரவரி 2024, 3:18 pm IST
பகிர்:

கயல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. இப்படத்திற்குப் பின் பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களில் நடித்து கவனிக்கப்பட்டார்.

பின், 2021-ல் மூடர்கூடம் இயக்குநர் நவீனின் உறவினரான சாக்ரடீஸ் என்பவரைத் திருமணம் செய்த ஆனந்திக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இதையும் படிக்க: ’நடிக்க வருகிறேன்..’: சமந்தா

Advertisement

Advertisement

விரைவில், ஆனந்தி நடித்த ‘மங்கை’ திரைப்படம் வெளியாகிறது. தொடர்ந்து, பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’.

இதில் நடிகர் ஆர் கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இதன் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.