எல்ஐசி படப்பிடிப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் எல்ஐசி படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. ஆனால், சில பிரச்னைகளால் அப்படம் கைவிடப்பட்டது.
தற்போது, ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு, லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ’மம்மூட்டியின் உக்கிர சிரிப்பு..’ பிரம்மயுகம் டிரைலர்!
தற்போது, படத்தின் படப்பிடிப்பு கோவை, உடுமலைப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் சீமான் இயற்கை விவசாயம் செய்பவராக நடிக்கிறாராம்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். அவரும் விக்னேஷ் சிவனும் இருக்கும் புகைப்படம் வெளியாகி இதை உறுதிப்படுத்தியுள்ளது.