மகான் - 2!
மகான் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் நடிகர் விக்ரம்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் மகான். நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தந்தை மகனான விக்ரம், துருவ் விக்ரம் கதாபாத்திரங்கள் பெரிதாகப் பேசவும் பட்டன. திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டிய படம் என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: ராஜு முருகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா?
Advertisement
Advertisement
இப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், நடிகர் விக்ரம் வயதான மகான் தோற்றப் படங்களை வெளியிட்டு மகான் - 2 என ஆச்சரியம் மற்றும் கேள்விக்குறியைப் இணைத்துள்ளார்.
இதனால், மகான் - 2 உருவாகலாம் என்றும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.