பிரதீப் ஆண்டனி நடிக்கும் புதிய படம்: முன் தொகை இத்தனை லட்சங்களா?
பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மக்களின் அதிக வரவேற்பைப் பெற்ற போட்டியாளரான பிரதீப் ஆண்டனி, அதிரடியாக அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தகாத வார்த்தைகள் பயன்படுத்துகிறார், பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் மீது சக போட்டியாளர்கள் முன்வைத்தனர்.
Advertisement
Advertisement
இதனால் பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இதற்கு பிரதீப்பின் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக பிரதீப் ஆண்டனி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “இந்த வருஷம் நடித்து கொஞ்சம் காசு சாம்பாதிக்கலாம்னு அட்வான்ஸ்லாம் வாங்கியிருக்கேன். படம் பொறுமையாதான் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ராஜு முருகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா?
மேலும், புதிய படத்திற்கு பிரதீப் ஆண்டனி வாங்கிய முன் தொகை 9 லட்சத்திற்கான காசோலை புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.