முகப்பு
செய்திகள்

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்!

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:23 PM
கோப்புப்படம்
பகிர்:

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 14-வது வாரத்தை எட்டியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 7-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். 

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement

மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.

இவர்களில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் இருந்து இருவர் மீண்டும் வைல்டு கார்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். சென்ற வாரம் ரவீனா மற்றும் நிக்சன் வெளியேறினர். இந்த வாரம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பூர்ணிமா ரவி இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இதனிடையே, டிக்கெட் டீ ஃபினாலே போட்டியில் விஷ்ணா வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக சென்றதால், அவரைத்தவிர மற்றவர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர்.

குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விசித்ரா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இறுதிப்போட்டிக்கு விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா, மாயா, மணி, விஜய்வர்மா ஆகியோர் சென்றுள்ளனர். அடுத்த வாரம் ஜன. 14 ஆம் தேதி பிக் பாஸ் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments