கைவிடப்பட்டதா சிம்பு - 48?
சிம்பு நடித்து வந்த புதிய படம் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன் 48வது படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமானார்.
இந்தப் படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய படமாக உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இதற்காக, சிம்பு லண்டனில் தற்காப்புப் பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை. இதனால், இப்படத்தின் நிலை குறித்து எந்த அப்டேட்களும் வெளியாகாததால் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
Advertisement
இதையும் படிக்க: பொங்கல் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்!
மேலும், கமல்ஹாசன் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தைத் தயாரித்து வருவதால், அப்படத்துக்குப் பின் சிம்பு படம் தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.