முகப்பு
செய்திகள்

கவனம் ஈர்க்கும் ரோமியோ போஸ்டர்!

விஜய் ஆண்டனி நடிக்கும் ரோமியோ படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:21 AM
பகிர்:

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் ஆகிய படங்கள் வசூல் ரீதியான வெற்றிகளைப் பெற்றன. 

இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ‘ரோமியோ’ என்கிற காதல் படமொன்றில் நடித்து வருகிறார். நாயகியாக மிருணாளினி ரவி நடிக்கிறார்.

விஜய் ஆண்டனியே தயாரிக்கும் இப்படம் கோடை வெளியீடாக திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. முதலிரவின்போது நாயகனுக்கு பாலுக்குப் பதிலாக மதுவை ஊற்றிக்கொடுக்கும் நாயகி என சுவாரஸ்யமான இந்தப் போஸ்டர் கவனம் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.