முகப்பு
செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை!

சின்ன திரை நடிகை மதுமிதா படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

Updated On : 2 ஏப்ரல், 2025 at 4:16 PM
கொண்டாட்டத்தில் மதுமிதா - இன்ஸ்டாகிராம்
பகிர்:

சின்ன திரை நடிகை மதுமிதா படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இது தொடர்பான விடியோவை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த மதுமிதா, தற்போது அய்யனார் துணை தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த இவர், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை தொடரில் நடித்து வருகிறார்.

Advertisement

எதிர்நீச்சல் தொடரில் கிடைத்த வரவேற்பைப் போலவே, அய்யனார் துணை தொடரிலும் மதுமிதாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தனது வசீகரமான தோற்றத்தாலும், அழுத்தமான நடிப்பாலும் அய்யனார் துணை தொடரின் கதைக்கு பலம் சேர்ப்பவராக மதுமிதா மாறியுள்ளார்.

செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த கிராமத்துப் பெண், நகரத்திலுள்ள நடுத்தரக் குடும்பத்தில் திருமணம் முடிந்து வந்து, தனது குடும்பத்தால் சந்திக்கும் சவால்களும் அதனைப் புகுந்த வீட்டாருடன் எதிர்கொள்ளும் சூழலுமே அய்யனார் துணை தொடரின் கதைக்களம்.

அய்யனார் துணை தொடரிலிருந்து... - இன்ஸ்டாகிராம்

இத்தொடரில் இவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் பிரபலம் அரவிந்த் சேஜு நடிக்கிறார். இத்தொடரில் அரவிந்த்-இன் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தி பாத்திரத்தில் நடித்த ரோசரி, இத்தொடரில் அரவிந்த்-இன் தந்தையாக நடிக்கிறார்.

படப்பிடிப்பின் நடுவே அடிக்கடி பயணம் செல்வதை வாடிக்கையாகக் கொண்ட மதுமிதா, சமீபத்தில் தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தனது நண்பர்களுடன் விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை மதுமிதா பகிர்ந்திருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தளத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய விடியோவை பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகும் புதிய தொடர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.