சாகசம் செய்து பிறந்த நாள் கொண்டாடிய நடிகை மதுமிதா!
எதிர்நீச்சல் புகழ் மதுமிதா தனது பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடியது சர்ச்சையாகியுள்ளது குறித்து...
சின்ன திரை நடிகை மதுமிதா தனது பிறந்த நாளை நண்பர்கள் உதவியுடன் வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளார்.
ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நண்பர்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்ட மதுமிதா, இம்முறையும் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் மதுமிதா பகிர்ந்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மதுமிதா. இவர் தெலுங்கில் ஒருசில தொடர்கள் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
Advertisement
Advertisement
எதிர்நீச்சல் தொடர், டிஆர்பியில் முன்னணியில் இருந்ததுடன், இவரின் நடிப்புக்கும் எதிர்நீச்சல் தொடர் சிறப்பான அங்கீகாரம் கொடுத்தது.
எதிர்நீச்சலில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரில் மதுமிதா நடித்து வருகிறார். அய்யனார் துணை தொடரும் விஜய் தொலைக்காட்சியின் முக்கிய தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது.
எந்த தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தாலும், மதுமிதா நாயகியாக நடிக்கும் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெறுவதால், சின்ன திரையில் மிக முக்கியமான நாயகியாக மாறியுள்ளார்.
ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்ட மதுமிதா, நண்பர்களுடன் சேர்ந்து வித்தியாசமான முறையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
பிறந்தநாளின்போது மெழுகுவர்த்தியை வாயில் வைத்து பற்ற வைத்து கேக் மீது வைத்து பின்னர், கேக் மீது உள்ள மெழுகுவர்த்திகளை ஆபத்தான முறையில் ஊதுகிறார். அது அணையாமல் கொழுந்துவிட்டு எரிகிறது. இதனை விடியோவாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வந்தாலும், சிலர் மதுமிதாவின் இத்தகைய செயலை கண்டிக்கவும் செய்துள்ளனர்.
பாதுகாப்பு அம்சங்களுடன் அவர் இத்தகைய ஆபத்தான காரியங்களை செய்தாலுமே, அதனை சமூகவலைதளப் பக்கத்தில் பகிரும்போது ரசிகர்களில் சிலர் அதனால் தவறாக வழிநடத்தப்படலாம் என்ற அச்சம் எழுவதாக பலர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
Ayyanar thunai serial actress Madhumitha Bday celebration
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.