முகப்பு
செய்திகள்

வீர தீர சூரன் - ஒரு வார வசூல் இவ்வளவா?

வீர தீர சூரன் படத்தின் வசூல் பற்றி...

Updated On : 3 ஏப்ரல், 2025 at 3:16 PM
விக்ரம்
பகிர்:

விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தின் ஒரு வார வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்தப் படம் கடந்த வியாழனன்று (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியானது.

நிதி பிரச்னையால் படம் வெளியான அன்று முதல் 2 காட்சிகள் திரையிடப்படவில்லை. மாலை 4 மணிக்கே முதல் காட்சி வெளியானது.

இந்த நிலையில், அதிரடியான ஆக்சன் படமாக உருவாகியிருந்த வீர தீர சூரன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

முக்கியமாக, கடந்த சில ஆண்டுகளில் வெளியான விக்ரம் படங்களில் ரசிகர்களைக் கவரும் கமர்ஷியல் அம்சங்களுடன் இந்தப் படமே இருந்ததாக அவரது ரசிகர்கள் கூறினர்.

அதுமட்டுமின்றி, வணிக ரீதியாகவும் படம் வெற்றிபெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

முதல் 5 நாள்களில் உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூலித்த வீர தீர சூரன் திரைப்படம் ஒரு வார முடிவில் ரூ. 52 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த வாரம் புதிய வெளியீடாக பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் இந்தப் படம் மேலும் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →