கூலி பட போஸ்டர் 
செய்திகள்

தேவா வாராரு... கூலி வெளியீட்டுத் தேதி!

கூலி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் கூலி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு வெளியானது.

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமான கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் செளபின் ஷாயிர், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அதுமட்டுமின்றி, நடிகர் அமீர் கான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.

கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்த நிலையில் படத்தின் வெளியீடு மற்றும் டீசர் பற்றிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கூலி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவுள்ளது.

பான் இந்தியா படமாக உருவாகி வரும் கூலி, தமிழின் முதல் ரூ. 1,000 கோடி வசூல் செய்யப்போகும் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

கந்த சஷ்டி விழா: இன்று தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்

உவரியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடம் இடிப்பு

கடலூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

பூட்டிய வீட்டில் தம்பதி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT