குட் பேட் அக்லி - டிரைலர் அப்டேட்!
குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் வெளீயீடு பறி...
குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக உள்ளது.
படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில் ஆகியோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் இரு பாடல்கள் முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
குட் பேட் அக்லி ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆனால், ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டனர்.
இந்தப் படத்தின் முன்பதிவு இன்று இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.
அதுமட்டுமின்றி, படத்தின் டிரைலரும் இன்றே வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால், முன்பதிவிலேயே படம் நல்ல வசூலை அள்ளும் என்று தயாரிப்புத் தரப்பு எதிர்பார்ப்பில் உள்ளனர்.