FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

சாருகேசி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 'சாருகேசி' படத்தின் இசை மற்றும் டிரைலரை வெளியிட்டார்.
பகிர்:
படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ நிகழ்வில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
கலாச்சார செழுமையும் இசையும் நிறைந்த ஒரு கதையை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்த தயாரிப்பாளர்களை பாராட்டி, படத்தின் வெற்றிக்குத் தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
படத்தில் ஒய் ஜீ மகேந்திரா, சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

படத்திற்கு தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார்.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், அருண் விஷுவல்ஸ் தயாரிப்பில், ஈ5 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஜே. ஜெயகிருஷ்ணன் உலகெங்கும் வெளியிடும் படம் சாருகேசி.
வரும் ஜூன் 12ஆம் தேதி வெளியாக 'சாருகேசி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments