ஹெபா படேலின் போஸ்டர் படம்: எக்ஸ் / சம்பத் நந்தி.
செய்திகள்

தமன்னாவின் ஒடேலா 2: ஹெபா படேலின் போஸ்டர்!

ஒடேலா 2 படத்தின் நடிகை ஹெபா படேலின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

நடிகை தமன்னா நடித்துள்ள ஒடேலா 2 படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.

தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

தற்போது, ஒடேலா 2 படத்தில் நடித்து முடித்துளார். இந்தப் படம் வரும் ஏப்.17ஆம் தேதி வரவிருக்கிறது.

சம்பத் நந்தி எழுதிய இந்தப் படத்தை அசோக் தேஜா இயக்கியுள்ளார்.

ரிலீஸுக்கு இன்னும் 13 நாள்களே உள்ள நிலையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், நடிகை ஹெபா படேலின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்துள்ளார்கள்.

தெலுங்கில் ஹிட் அடித்த ஒடேலா முதல் பாகம் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு உருவாகிய த்ரில்லர் படம் ஆஹா ஓடிடியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது.

இதன் டீசர் மகா கும்பமேளாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

SCROLL FOR NEXT