செய்திகள்

எம்புரானில் நடித்த இந்த நடிகர் யார் தெரியுமா?

எம்புரானில் அறிமுகமான நடிகர் குறித்து....

DIN

எம்புரானில் அறிமுகமான நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படம் வெளியான நாள்முதல் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் விமர்சனங்களைச் சந்தித்தாலும் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்து மலையாளத்தின் அதிக வசூலித்த படம் என்கிற சாதனையை அடைந்துள்ளது.

அதேநேரம், சர்ச்சையை ஏற்படுத்தியதாகக் கருதப்பட்ட சில காட்சிகளை நீக்கியதுடன் 17 இடங்களில் கட் செய்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

படத்தின் மீதான சர்ச்சைகளும் விமர்சனங்களும் ஒருபுறம் இருந்தாலும் எம்புரானில் ஒரு காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர் திடீரென வந்து சென்றார்.

சின்ன கதாபாத்திரத்திற்கு எதற்கு பின்னணி இசை? ஸ்லோமோஷன் ஷாட் என ரசிகர்கள் குழம்பினர்.

ஆனால், அந்த நடிகர் யாரோ ஒரு அறிமுக நடிகர் இல்லை. அவர் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரின் மகன் ஆஷிஷ் ஜோ ஆண்டனி. இந்தப் படத்தின் மூலமே சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

எம்புரானில் ஆண்டனி பெரும்பாவூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதே படத்தில் தன் மகனையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

அரையிறுதியில் ஜோகோவிச் - அல்கராஸ் பலப்பரீட்சை

SCROLL FOR NEXT