நெல்சன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்?
நெல்சன் - ஜூனியர் என்டிஆர் கூட்டணி குறித்து...
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நெல்சன் நடிகர் ரஜினியை வைத்து இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து ஜெயிலர் - 2 படத்தின் படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார்.
பான் இந்திய நடிகர்கள் நடிக்கும் இப்படம் அடுத்தாண்டு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
Advertisement
இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆரை வைத்து புதிய படத்தை இயக்க நெல்சன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேவரா படத்தின் வெற்றிக்குப் பின் ஜூனியர் என்டிஆர் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஹிருத்திக் ரோஷனுடன் வார் - 2 படத்திலும் நடிக்கிறார்.
இப்படங்களைத் தொடர்ந்து நெல்சனுடன் இணைவார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: எம்புரானில் நடித்த இந்த நடிகர் யார் தெரியுமா?