நடிகர் அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் மறுவெளியீடாகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் 1990 ஆம் ஆண்டு ’என் வீடு என் கணவர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு தெலுங்கில் பிரேம புஸ்தகம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன்பின், ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா என பல காதல் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் வளரும் நட்சத்திரமானார்.
2000-களின் துவக்கத்தில் அஜித்துக்கு நிறைய வெற்றிப்படங்கள் அமைந்தாலும் அதில் தனித்துவமான படமாகப் பார்க்கப்படுவது இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம்தான்.
2000-ல் வெளியான இப்படத்தில் அஜித்துடன் மம்மூட்டி, தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘என்ன சொல்ல போகிறாய்’ பாடலுக்காக பாடகர் ஷங்கர் மகாதேவன் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை வென்றார்.
ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில் , இப்படம் இந்தாண்டுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதால் நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதியில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தை மறுவெளியீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ரீ- மாஸ்டர் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.