கேங்கர்ஸ் முதல் பாடலின் போஸ்டர்.  
செய்திகள்

கேங்கர்ஸ்: முதல் பாடலின் புரோமோ விடியோ!

கேங்கர்ஸ் படத்திலிருந்து முதல் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.

DIN

கேங்கர்ஸ் படத்திலிருந்து புதிய பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.

மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ்.

முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக சுந்தர். சி, நாயகியாக கேத்ரீன் தெரசா முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏப். 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் நேற்று (ஏப். 1) வெளியானது.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி 2 நாள்களில் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளதாக படக்குழு போஸ்டரை வெளியிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

சி.சத்யா இசையில் பா.விஜய் எழுதிய குப்பன் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலின் முழுமையான விடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடலில் கேத்ரின் தெரேசாவின் கவர்ச்சியான நடனமாடியுள்ளார்.

சுந்தர். சி படங்களில் இந்த மாதிரியான பாடல் ஒன்று நிச்சயமாக இடம்பெறுவதும் அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் அடிப்பதும் கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

SCROLL FOR NEXT