முகப்பு
செய்திகள்

குட் பேட் அக்லி - திரைகள், காட்சிகள் அதிகரிப்பு!

குட் பேட் அக்லி குறித்து...

Updated On : 12 ஏப்ரல், 2025 at 2:50 PM
பகிர்:

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு கூடுதல் திரைகளும் காட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த திருப்தியளித்துள்ளதால் பலரும் ம்றுமுறையும் திரையரங்கில் இப்படத்தைப் பார்த்து வருகின்றனர்.

முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 30 கோடியை வசூலித்தது. மேலும் பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்வதால் இந்த வார இறுதிக்குள் ரூ. 100 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை உள்பட பல நகரங்களில் படத்திற்குக் கூடுதல் திரைகள் மற்றும் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரவு நேரக் காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக இருப்பதால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் மிக லாபகரமான படமாக குட் பேட் அக்லி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →