ரஜினி - கமல் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்?
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர்....
ரஜினிகாந்த், கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கான புரோமோ படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளாராம். புரோமோவில் இவரும் இடம்பெறலாம் எனத் தெரிகிறது.
summary