80-களின் தோற்றத்தில் ரஜினி, கமல்?
ரஜினி, கமல் திரைப்படம் குறித்து...
ரஜினிகாந்த், கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் புரோமோ குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கான புரோமோ படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளாராம். புரோமோவில் இவரும் இடம்பெறலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், புரோமோ காட்சியில் ரஜினி, கமல் இருவரும் 80-களின் தோற்றத்தில் இருப்பது போன்று டீ-ஏஜிங் தோற்றங்கள் இடம்பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
rajinikanth and kamalhaasan as their 80's look in new movie
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.