சீமானின் 60வது பிறந்த நாள்! தானே கற்றுத் தகுதி பெறும் பெரு முயற்சி! - கமல் ஹாசன் வாழ்த்து!
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மநீம தலைவர் கமல் ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மாநிலங்களவை உறுப்பினர் கமல் ஹாசன் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (நவ. 8) தனது 60 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து, நாதக மூத்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மநீம கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன் தனது பாணியில் கவிதை மூலம் சீமானுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“சினிமா என்றால்
கையூன்றிக் கரணமிட்டு,
தானே கற்றுத் தகுதி பெறும் பெரு முயற்சி
மேடைகளில்
சொலல்வல்லன் எனும்
சொல்லுக்கு இலக்கணமாய்க்
கொடி கட்டும் பேரூக்கம்
அரசியல் எனில்
எண்ணித் துணிந்த பின்பு
கொண்டதே கொள்கையென
மாறாப் பேருறுதி
இப்படி இக்கணத்தில்
எல்லா இலக்கணத்தில்
பொருந்தி வாழும் என் சகோதரர்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமானுக்கு இன்று பிறந்தநாள்.
செந்தமிழனுக்கு என்
சிந்தை மகிழ் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.