நடிகர் ஃபாசில் ஜோசஃப் நடித்த மரண மாஸ் திரைப்படத்துக்கு சவுதி மற்றும் குவைத் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இயக்குநராக அறியப்பட்ட ஃபாசில் ஜோசஃப் தற்போது மலையாள சினிமாவில் நடிகராகக் கலக்கி வருகிறார். எந்தப் படத்தில் நடித்தாலும் தன் தனித்துவமான சிரிப்பு மற்றும் உடல் மொழியால் கதையின் தரத்திற்கு மேலும் வலு சேர்த்து விடுகிறார்.
இறுதியாக இவர் நடிப்பில் வெளியான சூட்சுமதர்ஷினி, பொன்மேன் ஆகிய படங்கள் ஹிட் அடித்ததுடன் தமிழகத்திலும் அவருக்கு ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
தற்போது, இயக்குநர் சிவபிரசாத் இயக்கத்தில் ஃபாசில் நடித்த மரண மாஸ் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
நகைச்சுவை திரைப்படமாக உருவான இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால், இப்படத்தில் திருநங்கை ஒருவர் நடித்துள்ளதால் சவுதி அரேபியா மற்றும் குவைத் நாட்டில் திரையிட அந்நாட்டு தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது. படத்தை வெளியிட வேண்டுமென்றால் திருநங்கை இடம்பெறும் காட்சியை நீக்க வேண்டும் என சென்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.