செய்திகள்

தி ஒன் - ரெட்ரோ மூன்றாவது பாடல்!

ரெட்ரோ புதிய பாடல்...

DIN

ரெட்ரோ படத்தின் மூன்றாவது பாடலை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

மே 1 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதால் அடுத்தடுத்து அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

முதலில் வெளியான கண்ணாடிப் பூவே மற்றும் அண்மையில் வெளியான கனிமா பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. மேலும், கனிமா பாடல் வரிகளுக்கு பூஜா ஹெக்டே ஆடிய நடனம் வைரலானதால் பலரும் ரீல்ஸ் செய்து டிரெண்ட் செய்தனர்.

இந்த நிலையில், தி ஒன் என்கிற இப்படத்தின் மூன்றாவது பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசைமைப்பில் விவேக் எழுதிய இப்பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சா.நா. இணைந்து பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னித்தீவு... ஆன் ஷீத்தல்!

இன்ப அதிர்ச்சி... ஐஸ்வர்யா!

பிகாரில் மூன்றாவது அணியை அமைக்க ஓவைசி மும்முரம்: பிற கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை!

கருப்பு, வெள்ளை... அஸ்லி மோனலிசா

நினைவுகள்... சுதா

SCROLL FOR NEXT