சூரியின் புதிய படம்: மண்டாடி!
நடிகர் சூரியின் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது முழுநேர நடிகராக மாறியிருக்கும் சூரியின் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் பெயரில் எல்ரெட் குமார் தயாரிக்கும் ‘மண்டாடி’ படத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவரும் ஜி.வி.பிரகாஷ் நடித்த செல்ஃபி படத்தின் இயக்குநருமான மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சூரியின் சமீபத்திய கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 ஆகிய படங்களில் அவர் நடிப்பு பேசப்பட்ட நிலையில் அந்தப் படங்களும் நல்ல வசூலைப் பெற்றன.
இந்த நிலையில், மண்டாடி படத்தின் தலைப்பு அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. இதன் முதல்பார்வை போஸ்டர் நாளை (ஏப்.19) வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டாடி என்பது கடல் நீர்வாடு பற்றிய அழ்ந்த அறிவு உள்ளவர், நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து சூரி தனது எக்ஸ் பக்கத்தில், “எல்லையற்ற கடல் தன்னுள் முடிவில்லா இரகசியங்களை சுமக்கும்பொழுது, நெருப்பினால் மட்டுமே அதன் கதைகளை சொல்ல முடிகிறது” எனக் கூறியுள்ளார்.