நடிகை சிம்ரன். படங்கள்: இன்ஸ்டா / சிம்ரன்.
செய்திகள்

‘ஆன்டி’ கதாபாத்திரங்கள் மேலானது..! சக நடிகையின் கிண்டலுக்கு சிம்ரன் பதில்!

தன்னை மோசமாகப் பேசிய சக நடிகைக்கு நடிகை சிம்ரன் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

DIN

நடிகை சிம்ரன் தன்னைக் குறித்து ஆன்டி கதாபாத்திரங்களில் நடிப்பவர் என மோசமான கமெண்ட் செய்த சக நடிக்கைக்கு காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

நடிகை சிம்ரன் 90களில் தமிழ்ப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். இப்போது வரைக்கும் நடிகர் விஜய்க்கு சமமாக நடனம் ஆடிய ஒரே நடிகை என்ற பாராட்டைப் பெற்றவரும் அவர்தான்.

நடிகை சிம்ரன் திருமணத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். நாயகியாக அல்லாமல் நல்ல கதைகளில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன் நடித்திருந்தார். தற்போது, நடிகர் சசிகுமாருடன் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

லோகேஷ் குமார் இயக்கி வரும் தி லாஸ்ட் ஒன் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனியார் விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு நடந்தது குறித்து ஆதங்கமாகப் பேசியுள்ளார். அதில் சிம்ரன் பேசியதாவது:

சமீபத்தில் சக நடிகையிடம் ஏன் இந்தப் படத்தில் நடித்தீர்கள் என ஆச்சரியமாகக் கேட்டேன். அதற்கு உடனடியாக, ‘உங்களைப் போல ஆன்டி கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட இது சிறந்தது’ எனப் பதில் வந்தது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு புரிதலற்ற பதிலை எதிர்பார்க்கவில்லை. இதைவிடவும் நல்ல பதில் எனக்குக் கிடைத்திருக்கலாம்.

நான் 25 வயதிலேயே முக்கியமான ‘ஆன்டி’ கதாபாத்திரத்தமான கன்னத்தில் முத்தமிட்டாள் நடித்துள்ளேன். டப்பா கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட முக்கியமான ’ஆன்டி’ கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என சிம்ரன் கூறினார்.

சிம்ரனை மோசமாக பேசிய அந்த நடிகை யாராக இருக்குமென பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.38.50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடங்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

பெங்களூரில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வேனை மறித்து ரூ. 7.11 கோடி கொள்ளை!

தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

கா்நாடக காங்கிரஸ் தலைவராக நானே தொடரமுடியாது: டி.கே.சிவகுமாா்

போதை இல்லா இந்தியா விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT