லோகேஷ் கனகராஜ் கோப்புப் படம்
செய்திகள்

சமூக ஊடகங்களில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

DIN

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

மாநகரம் படத்தில் அறிமுகமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் முக்கியமான இயக்குநராக மாறியுள்ளார்.

விஜய்யுடன் மாஸ்டர், லியோ என்ற வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினியை வைத்து கூலி என்ற படத்தினை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

கூலி திரைப்படம் வரும் ஆக.14ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “கூலி படத்தின் புரமோஷன் வரைக்கும் சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஒவ்வொரு படத்துக்கு பின்பும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படி ஓய்வு எடுப்பது வழக்கமானதுதான். இது மாதிரி ஏற்கனவே பலமுறை அவர் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கூலி திரைப்படத்தில் ரஜினியுடன் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் சஹார் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் தேவி விருது பெறும் மலையேற்ற வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் தேவி விருது பெறும் கல்வியாளர் சூசன்னா டர்காட்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் தேவி விருது பெறும் நாடகக்கலை பயிற்சியாளர் ஆயிஷா ராவ்!

மகாராஷ்டிர துணை முதல்வராக சுனேத்ரா பவார் நாளை பதவியேற்பு!

தூய்மைப் பணியாளர்களுக்கு தரமற்ற உணவு: அண்ணாமலை குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT