முகப்பு
செய்திகள்

ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக ஃபஹத் ஃபாசில்?

நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தில் ஃபஹத் ஃபாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 24 ஏப்ரல், 2025 at 11:50 AM
ரஜினிகாந்த், ஃபஹத் ஃபாசில்.
பகிர்:

நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தில் ஃபஹத் ஃபாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் 2023-இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது ஜெயிலர் திரைப்படம். இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.

அனிருத் இசையமைக்க தமன்னாவின் நடனம் மிகவும் வைரலானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தற்போது, இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளத்திலும் சமீபத்தில் கோவையிலும் நடைபெற்றது.

இந்நிலையில், படத்தில் வில்லனாக ஃப்ஹத் ஃபாசில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் 2 படக்குழுவிடமிருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில், ஏற்கனவே ஃபஹத் ஃபாசில் ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →