மறுவெளியீட்டில் ரூ.10 கோடியைக் கடந்த சச்சின்!
விஜய்யின் சச்சின் திரைப்படம் மறுவெளியீட்டில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
விஜய்யின் சச்சின் திரைப்படம் மறுவெளியீட்டில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் கடந்த ஏப்.18ஆம் தேதி மறுவெளியீடானது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கி 2005-ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார்.
Advertisement
Advertisement
சந்திரமுகி படத்துடன் இணைந்து வெளியானதால் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் ஓரளவு நல்ல வசூலை இப்படம் பெற்றது.
காதல், நகைச்சுவை என அனைவராலும் ரசிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான பாடல்களும் பெரிதும் கொண்டாடப்பட்டன.
இந்நிலையில் படம் ரூ.10 கோடிக்கும் அதிகமான வசூலித்துள்ளது. கில்லி திரைப்படம் ரூ.50 கோடி வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் வசூலினை சச்சின் முறியடிக்குமா என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு நடிகை ஜெனிலியா விடியோ வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, விஜய் தனது கடைசி படமான ஜன நாயகனில் நடித்து வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.