துல்கர் சல்மான், நானி 
செய்திகள்

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

துல்கர் சல்மான் - 41 படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் ஐயம் கேம் என்கிற படத்திலும் தமிழில் காந்தா படத்திலும் நடித்து வருகிறார்.

அதேநேரம், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படமான ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) படத்திலும் துல்கர் சல்மான் நடிக்கிறார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், துல்கர் சல்மான் தன் 41-வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ரவி நெலகுதிதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. நடிகர் நானி படப்பிடிப்பைத் துவங்கி வைத்தார்.

இப்படத்திற்கும் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

actor dulquer salmaan's 41th movie pooja ceremony happens today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியே சநாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம்! - கமலுக்கு பாஜக உறுப்பினர்கள் கண்டனம்

உலக சினிமா

ஆபரேஷன் சிந்தூர்

தென்னாப்பிரிக்கக் காடுகளில்...

வெளிநாட்டு மண்ணில் முதல்முறை... இந்திய அணியின் தனித்துவமான சாதனை!

SCROLL FOR NEXT