பனிமலரே பாடல் வெளியீடு... 
செய்திகள்

காந்தா முதல் பாடல் வெளியானது!

நடிகர் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் துல்கர் சல்மானின் ”காந்தா” திரைப்படத்தின் முதல் பாடலான “பனிமலரே” வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும், நடிகர் துல்கர் சல்மான், வித்தியாசமான வேடங்களில் தொடர்ந்து நடித்து வருவதன் மூலம் ரசிகர்களிடையே தனி கவனம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகி வரும் “காந்தா” திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகின்றது.

இந்தப் படத்தின் டீசர் வெளியான நாள் முதலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டாரான தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடலான “பனிமலரே” இன்று (ஆக.9) மாலை படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜானு சந்தர் இசையில், பாடகர் பிரதீப் குமார், பாடகி பிரியங்கா ஆகியோரது குரலில் உருவாகியுள்ள இப்பாடலின் வரிகளை குட்டி ரேவதி எழுதியுள்ளார்.

வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும், காந்தா திரைப்படத்தில், நடிகர்கள் ராணா டகுபதி, சமுத்திரகனி, நடிகை பாக்யஸ்ரீ போஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கேப்டன் பிரபாகரன் மறுவெளியீட்டு டிரைலர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"காங்கிரஸின் நிலை தான் தவெகவிற்கும்!” SIR எதிர்ப்பு பற்றி அண்ணாமலை! | TVK | BJP

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்! | Flash Flood | Shorts

கேரளத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்த வயதான தாயும் மகனும் தற்கொலை: போலீஸ் விசாரணை

ஐபிஎல் மினி ஏலம்- எந்தெந்த அணியிடம் எவ்வளவு தொகை?

10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! பாஜக பிரமுகருக்கு சாகும் வரை ஆயுள் சிறை!

SCROLL FOR NEXT