ஆல்யா மானசா - ரக்‌ஷித் 
செய்திகள்

மாறுபட்ட கதையில் ஆல்யா மானசா: பாரிஜாதம் தொடரின் முன்னோட்ட விடியோ!

ஆல்யா மானசாவின் பாரிஜாதம் தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆல்யா மானசாவின் பாரிஜாதம் தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராஜா ராணி தொடரில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை ஆல்யா மானசா. இவர் நடிகை மட்டுமல்ல, நடனக் கலைஞரும்கூட.

ராஜா ராணி தொடரில் நடிக்கும்போது, நடிகர் சஞ்ஜீவ் உடனான நட்பு காதலாக மாறி, திருமணத்தில் நிறைவடைந்தது. திருமணத்துக்குப் பிறகு ராஜா ராணி பாகம் 2 தொடரிலும் ஆல்யா மானசா நடித்திருந்தார். பின்னர், இத்தொடரில் இருந்து விலகினார்.

இதனைத் தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இனியா தொடரில் நடித்து கம்பேக் கொடுத்து, தனது ரசிகர்களைக் தக்கவைத்து கொண்டார்.

இந்தத் தொடருக்குப் பிறகு எந்த தொடரிலும் நடிக்காத ஆல்யா மானசா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடருக்கு பாரிஜாதம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பாரிஜாதம் தொடரில், ஆல்யா மானசாக்கு ஜோடியாக ரக்‌ஷித் நடிக்கிறார். மேலும் இத்தொடரில் ஸ்வாதி, ராஜ்காந்த், லதா ராவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்.

இசைக் கலைஞரான நாயகன்(ரக்‌ஷித்), தாயை இழந்த நாயகி மீது (ஆல்யா மானசா) காதல் வசப்படுகிறான். இந்த இரண்டுபேரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே தொடரின் மையக்கரு.

நடிகை ஆல்யா மானசா முன்னெப்போதும் நடிக்காத மாறுப்பட்ட கதையில் நடித்து வருவதால், இந்தத் தொடர் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பாரிஜாதம் தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், இந்தத் தொடரின் ஒளிபரப்பு தேதி, நேரம் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The preview video of Alya Manasa's Parijatham series has been released and is attracting the attention of fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

SCROLL FOR NEXT