செய்திகள்

கூலியால் வார் - 2 படத்துக்கு சிக்கல்?

ரஜினியின் கூலி படத்தால் வார் - 2 படம் பின்னடைவைச் சந்தித்துள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

கூலி திரைப்படத்தால் வார் - 2 திரைப்படம் சிக்கலைச் சந்தித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியீட்டுக்குத் தயாரான கூலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புக் மை ஷோ (book my show) ஆன்லைன் டிக்கெட் தளத்தில் படம் வெளியாவதற்கு 3 நாள்களுக்கு முன்பாகவே கூலி திரைப்படத்திற்கு 10 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது திரைத்துறையினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கூலி வெளியாகும் ஆக. 14 ஆம் தேதியில் நடிகர்கள் ஹ்ருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடித்த வார் - 2 திரைப்படமும் வெளியாகவுள்ளது.

ஆனால், வார் - 2 திரைப்படத்திற்குப் பெரிய வரவேற்பும் ஆன்லைன் முன்பதிவும் நடைபெறவில்லை. இதனால், படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கூலி தமிழ்ப்படமாக இருந்தாலும் ஆமீர் கான், நாகர்ஜூனா உள்ளிட்டோர் படத்தில் நடித்திருப்பதால் இந்தியளவில் எதிர்பார்ப்பு இருப்பது வார் - 2 படத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

war 2 movie had a trouble for rajini's coolie release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் ஒருநாள் தொடர்!

கூலி திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை: சென்னை உயர் நீதிமன்றம்

வரப்பெற்றோம் (11-08-2025)

சாதாரண சொற்களுக்குச் சட்டத்தில் சாதாரண அர்த்தம்தானா?

கோபி சுதாகர் மீது வழக்குப் போடுவது சமூக தீண்டாமையை காட்டுகிறது - Seeman

SCROLL FOR NEXT