அருண் பாண்டியன் தயாரிப்பில் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள அஃகேனம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் உதய் இயக்கத்தில் வெளியான 'அஃகேனம்' எனும் படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார்.
அஃகேனம் என்றால் மூன்று புள்ளி. அந்த மூன்று புள்ளி என்பது இப்படத்தில் இடம்பெறும் மூன்று கதாபாத்திரத்தினை பிரதிபலிக்கிறது. அந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதை என்பதால் அஃகேனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அஃகேனம் திரைப்படம் வரும் ஆக. 15 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தலைவன் தலைவி நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.