ஹிருதயப்பூர்வம் பட போஸ்டர்...  படம்: இன்ஸ்டா / மோகன்லால்.
செய்திகள்

மோகன்லால் படத்தில் பூவே உனக்காக சங்கீதா..! ரிலீஸ் எப்போது?

மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால் நடித்து முடித்துள்ளார்.

‘ஹ்ருதயப்பூர்வம்’ எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. அதில் ஃபகத் ஃபாசில் மட்டும்தான் மலையாளத்தில் ஒரே நடிகரா? எனக் கிண்டல் செய்யும் விதமாக இருந்தது.

இந்நிலையில், இந்தப் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனைப் பகிர்ந்த மாளவிகா, “ஓணத்தை நல்ல இதயங்களுடன் நிரப்புங்கள்” எனக் கூறியுள்ளார்.

தமிழில் பூவே உனக்காக படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை சங்கீதாவும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

இந்தப் படம் ஆக. 28ஆம் தேதி ஓணத்தை முன்னிட்டு வெளியாகிறது.

The new poster of Mohanlal's film hridayapoorvam has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெரு நாய்களை அப்புறப்படுத்த இடைக்காலத் தடை இல்லை: தீர்ப்பு ஒத்திவைப்பு!

குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள்..! யுஇஎஃப்ஏ கண்டனம்!

ஏலகிரி மலைமக்களுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

வங்கியில் வேலை வேண்டுமா..?: பரோடா வங்கியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சிகிச்சை, காப்பீடு, வீடு, உணவு... தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்புத் திட்டங்கள்- தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT