தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்த் இதுவரை 170 திரைப் படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். இந்த நீண்ட பயணத்தில் அவர் நடிப்பில் ரசிகர்களால் பாராட்டுகளையும் வணிக வெற்றிகளையும் பெற்ற முக்கியமான 50 திரைப்படங்கள்...
50 ஆண்டுகால சினிமா பயணத்தின் தொடக்கமாக சிவாஜிராவாக இருந்து நடிகர் ரஜினிகாந்த்தாக அறிமுகமான - அடையாளம் தந்த முதல் திரைப்படம்.
தமிழ் சினிமாவில் இப்படியும் ஒரு வில்லனா என மூன்றுமுடிச்சு படத்தில் ஆச்சரியப்படுத்தினார்.
கே. பாலசந்தருடன் ரஜினி இணைந்த மூன்றாவது திரைப்படம். நல்ல நடிகர் என்கிற பெயரைப் பெற்றுக் கொடுத்தது.
1977-ல் ரஜினி நடிப்பில் 14 திரைப்படங்கள் வெளியானாலும் என்றென்றும் நினைவுகூரப்படும் 'புவனா ஒரு கேள்விக்குறி'யில் உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் - நாயகனைப் போல ரஜினி, வில்லனைப் போல சிவகுமார்.
பாரதிராஜா கொடுத்த பரட்டையை மறக்க முடியுமா? மிக மோசமான வில்லனான ரஜினி, படத்தின் நாயகனுக்கு இணையாகக் கொண்டாடப்பட்டார்.
ரஜினியின் ஆரம்பக்கட்டங்களில் அவருக்குப் பெயர் பெற்றுக் கொடுத்த படங்களில் முக்கியமானது.
வில்லனாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்திலும் அசத்துவேன் என ரஜினி உறுதி செய்த திரைப்படம்!
தமிழ் சினிமாவின் பொக்கிஷ ஆக்கங்களில் ஒன்றான இதில் தேவு என்கிற கொள்ளைக்காரனாக, கொலையாளியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார் ரஜினி.
ரஜினியின் ஆகச் சிறந்த வசனங்களில் ஒன்றான 'மது உண்டு, மாது உண்டு என்றால் சொர்க்கத்தில் இடமுண்டு!' இடம் பெற்ற படம்.
ரஜினியின் திரைப் பயணத்தை வடிவமைத்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது
ஐவி சசி இயக்கிய இப்படம் மூலம் மலையாளத்தில் ரஜினி அறிமுகமானார். அப்போதே தொழில்நுட்ப ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படம்
ரஜினியும் கமலும் இணைந்து நடித்த கடைசி திரைப்படம்.
ரஜினியின் நடிப்புக்கு இதைவிட பெரிய எடுத்துக்காட்டான படம் இருக்குமா?
யானையை மையமாக வைத்து உருவான இப்படம் குழந்தைகள் கொண்டாடிய வெற்றியாக மாறியது.
மை நேம் இஸ் பில்லா என தனக்கென ஒரு ஸ்டைல் மற்றும் உடல்மொழியைத் தன் கதாபாத்திரத்திற்குப் பொருத்தி வெற்றியைப் பெற்றார்.
மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.
கூலிங் கிளாஸ், திமிரான உடல்மொழி என நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் என மிரட்டியிருப்பார்.
ரஜினி - எஸ்.பி. முத்துராமன் கூட்டணியின் பெரிய வெற்றிப் படம். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் இப்போதும் நினைவு கூறப்படுகின்றன.
பல 90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான ரஜினி திரைப்படம்.
இந்திரன் - சந்திரனை நினைத்துச் சிரிக்காமல் இருக்க முடியுமா? கே. பாலச்சந்தர் - ரஜினி கூட்டணியின் தனித்துவமான படம்.
தொழிற்சாலையை மையமாக வைத்து உருவான படம். ரஜினியின் ஆக்சனும் காதலும் ரசிக்க வைத்தன.
250 நாட்கள் ஓடி சாதனை புரிந்த வெற்றித் திரைப்படம். இப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார்.
சாந்தமான ரஜினி, தனது சகோதரி மரணத்திற்கு காரணமான கடத்தல்காரனைப் பழிவாங்க தற்காப்பு பயிற்சி பெறுகிறார். சுவாரஸ்யமான ஆக்சன் ரிவெஞ்ச் கதை.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைத்த இப்படம் சகோதரப் பின்னணியில் நேர்த்தியான கதையாகவும் நல்ல உருவாக்கத்திற்காகவும் பாராட்டு பெற்றது.
ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி படமான இது, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
ரஜினியின் ஹிட் படங்களில் ஒன்று என்பதைத் தாண்டி தன் வசனங்களால் அதிக ரசிகர்களைச் சென்றடைந்தார்.
ரஜினி, ரேவதிக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் இளையராஜாவின் இசை கதைக்கு பலமாக அமைந்தது.
குழந்தைகளுக்கான படமாக உருவான இதில், ‘ரஜினி அங்கிள்’ என்கிற மீனாவின் வசனம் பிரபலமானது.
ரஜினியின் 100-வது படம். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி ராகவேந்திரராக நடித்து கவனம் பெற்றார். ஆனால், பெரிய வெற்றியைப் பெறவில்லை.
என்னம்மா கண்ணு சௌக்கியமா... என சூப்பர் ஹிட் ஆனது. இதுவே ரஜினியும் சத்யராஜும் இணைந்து நடித்த கடைசி படம்.
நகைச்சுவையாகவும் எமோஷனலாகவும் திரைக்கு வந்த இப்படம் ரஜினியின் ரசிகர்களுக்கு விருப்பமான படமாக இருக்கிறது.
தென்மதுரை வைகை நதியை மறக்க முடியுமா? இரட்டை வேடத்தில் உருவான ரஜினியின் படங்களில் இது எவர்கிரீன்!
மணிரத்னம் இயக்கத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்த ரஜினிக்கு வழக்கமான திரைப்படமாக இல்லாமல் வேறொரு கோணத்தைக் கொடுத்த படம்.
ரஜினியின் திரை வாழ்வில் மன்னனுக்கு தனியிடமுண்டு.
தன் நண்பனை வெல்லும் நாயகனாகவும் இறுதியில் வாழ்க்கையைப் புரிந்துகொண்டவராகவும் தன் கதாபாத்திர வளர்ச்சிக்கு ரஜினி சிறப்பாக பங்காற்றியிருப்பார்.
ஊரின் தலைவராகவும் சொந்த வாழ்வில் தடுமாறுபவராகவும் அட்டகாசமான கமர்சியல் படமாக ரஜினிக்கு அமைந்தது.
உழைப்பாளி படத்தில் இடம்பெற்ற பாடல் இன்றும் உழைப்பாளர் தின பாடலாகக் கொண்டாடப்படுகிறது.
ஆக்சன் நாயகனாகவே பார்த்த ரஜினியை வள்ளியில் பலரும் வேறொருவராகப் பார்த்தனர். அமைதியான வசனங்களால் படம் முழுக்க காத்திரமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
ஆஹா... இது மாதிரி பக்கா மாஸ் கமர்சியல் படம் இனி அமையாதா என ஏங்க வைக்கும் ரஜினியின் பட்டாசான வெற்றிப் படம். எப்போது மறுவெளியீடானாலும் கொண்டாடித் தீர்க்கும் வெற்றியாக உள்ளது. எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கிற படம்!
ரஜினி ரசிகர்களுக்கு தீராத விருந்தாக அமைந்த திரைப்படம்.
இன்றும் சலிக்காத வசனங்கள் இடம்பெற்ற ரஜினியின் படம். என் தனி வழியை உச்சரிக்காத நடிகர்களே இந்தியாவில் இல்லை.
ரஜினியிடமிருந்து எதிர்பார்க்காத தோல்விப் படமாக அமைந்தாலும் இக்கதையை ரசிக்கும் ரசிகர்கள் இன்றும் உள்ளனர்.
ரீமேக் படமான இது பாபாவின் தோல்விக்கு பின் ரஜினிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. 250 நாள்களுக்கும் மேல் ஓடி வசூலைக் குவித்தது.
இதுவே தென்னிந்தியாவில் முதல் 100 கோடி வசூலித்த திரைப்படம். கதையாகவும் உருவாக்கமாகவும் பெரிய கவனம் பெற்றது.
ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான இது, உலகளவில் கவனம் பெற்றது. முதல் நாள் முதல் காட்சியைத் தமிழகமே கொண்டாடியது.
ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்கியது. வெளியான காலத்தில் இதன் தொழில்நுட்ப காரணங்களுக்காக பாராட்டுகளைப் பெற்றது.
நீண்ட காலம் கழித்து உணர்வுப்பூர்வமான ஆக்சன் கதையில் நடித்த திரைப்படம்.
எந்திரனின் பிரம்மாண்டத்திற்குப் பின் ஷங்கருடன் இணைந்து மீண்டும் அசத்தலான வெற்றியைக் கொடுத்தார்.
ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படம் சிறந்த ஃபேன் பாய் படமாகப் பார்க்கப்படுகிறது.
அதிகம் வசூலித்த ரஜினியின் திரைப்படங்களில் ஜெயிலருக்குத்தான் முதலிடம். இப்போது, ஜெயிலர் - 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் தன் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் கூலி வரை 170 திரைப்படங்களில் நடித்துவிட்டார். விதவிதமான கதைகளில் வித்தியாசமான தோற்றங்களில் என தமிழ் சினிமாவின் வரலாற்றில் ரஜினிக்கு மிக முக்கியமான பங்குண்டு. இவ்வளவு ஆண்டுகளில் சில திரைப்படங்களை மட்டும் பட்டியலிடுவது சிரமம்தான் என்றாலும் 50 படங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ரசிகர்களால், ‘தலைவா’ என அன்பாக அழைக்கப்படும் ரஜினிகாந்த் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் ஆசை. நடக்கட்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.