முகப்பு
செய்திகள்

காந்தி கண்ணாடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சின்ன திரை நடிகர் பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ படத்தின் வெளியீடு குறித்து...

Updated On : 14 ஆகஸ்ட் 2025, 7:52 pm IST
பகிர்:

சின்ன திரை நடிகர் பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் “காந்தி கண்ணாடி” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சின்ன திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. இவர், இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் உருவாகி வரும் “காந்தி கண்ணாடி” எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் புதிய படத்தில், பிரபல இயக்குநர் பாலாஜி சக்திவேல், சின்ன திரை பிரபலம் அமுதவாணன், நடிகைகள் நமிதா கிருஷ்ணமூர்த்தி, நிகிலா சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

விவேக் - மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ”புல்லட் வண்டி” கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில், ”காந்தி கண்ணாடி” திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தேவா வந்துட்டார், வழிவிடலாமா? கூலி - திரை விமர்சனம்!

summary

The team has announced the release date of the film “Gandhi Kannadi”, which will feature small screen actor Bala as the lead actor.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.