ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் x / Lokesh Kanagaraj
செய்திகள்

தமிழகத்தில் வெளியானது கூலி!

கூலி திரைப்படம் வெளியானது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கூலி திரைப்படம் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் வெளியாகியுள்ளது.

இன்று அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரஜினியின் ரசிகர்கள், பட வெளியீட்டை மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கெனவே, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கூலி திரைப்படம் வெளியாகி முதல் காட்சி திரையிடப்பட்டு வருகின்றது.

நீண்ட காலத்துக்கு பிறகு, ஏ சான்றிதழுடன் வெளியாகும் ரஜினியின் படம் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் வசூலை நிகழ்த்தி, முதல் நாளே கூலி திரைப்படம் சாதனை படைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்பட 100 நாடுகளில் சேர்த்து 4500 - 5000 திரைகளில் கூலி திரைப்படம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Coolie was released in theaters across Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

40 வயதில் மீண்டும் கருவுற்ற பாலிவுட் நடிகை!

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

ரூ. 12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

அன்பின் வழியில்... அக்‌ஷதா!

பட்டுப் புன்னகை... சரண்யா துராடி!

SCROLL FOR NEXT