நடிகர் அப்பாஸ் பராசக்தி திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்த நடிகர் அப்பாஸ் பல வெற்றிப்படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார். காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, திருட்டு பயலே உள்ளிட்ட படங்களில் பேசக்கூடிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
திரைத்துறையில் வாய்ப்புகள் குறைய விளம்பரங்களில் நடித்தார். மெல்ல மெல்ல அங்கிருந்தும் மறைந்தவர் தன் குடும்பத்துடன் நியூசியாலந்தில் வசித்து வந்தார். தற்போது, இந்தியாவுக்குத் திரும்பியுள்ளர்.
இந்த நிலையில், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க அப்பாஸ் ஆர்வம் காட்டி வருகிறார்.
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.
அடுத்ததாக, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பராசக்தி திரைப்படத்திலும் அப்பாஸ் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அப்பாஸ் மீண்டும் சினிமாவுக்கு வந்தது அவரது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.