ஷங்கர், மணிரத்னத்தின் தோல்வி பயத்தைத் தருகிறதா? ஏ. ஆர். முருகதாஸ் பதில்!
ஷங்கர், மணிரத்னம் குறித்து ஏ. ஆர். முருகதாஸ்...
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் மூத்த இயக்குநர்கள் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தாலும் இறுதியாக அவர் இயக்கங்களில் வெளியான தர்பார், சிக்கந்தர் ஆகிய திரைப்படங்கள் தோல்விப் படங்களாகின.
தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் செப். 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஏ. ஆர். முருகதாஸிடம், “ஷங்கரின் இந்தியன் - 2, கேம் சேஞ்சர் மற்றும் மணிரத்னத்தின் தக் லைஃப் உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வியடைந்துள்ளன. இப்படியான, லெஜண்ட் இயக்குநர்களின் சறுக்கல் உங்களிடம் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்துகிறதா?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு ஏ. ஆர். முருகதாஸ், “இயக்குநர்கள் மணிரத்னமும் ஷங்கரும் மிகச்சிறந்தவர்கள். இருவரின் திரைப்படங்களும் வெறும் கமர்சியலைத் தாண்டி சமூக ரீதியான சிந்தனையையும் விதைக்கும். இவர்கள் இறக்கத்தைச் சந்திப்பதற்குக் காரணம், அவர்கள்தான் சாலைபோடக்கூடிய ஆள்கள். அதனால், அதில் ஏற்றமும் இறக்கத்தையும் சந்திக்கின்றனர்.
ஒருவர் சரியாக சென்றுகொண்டிருந்தால் யாரோ போட்ட சாலையில் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்றுதான் பொருள். ஆனால், மணிரத்னமும் ஷங்கரும் புதிதாக முயற்சி செய்கிறவர்கள். எவ்வளவு எளிதாக அவர்களைப் புறக்கணிக்க முடியாது. இருவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அலெஹாந்த்ரோ இனாரிட்டு அழைத்தும் வாய்ப்பை மறுத்த ஃபஹத்! ஏன்?
director a.r. murgadoss spokes about directors shankar and maniratnam's downfall
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.