செய்திகள்

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

சிதம்பரம் இயக்கும் படத்தின் பெயர் போஸ்டர்...

தினமணி செய்திச் சேவை

இயக்குநர் சிதம்பரம் இயக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.

தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து சாதனை செய்தது.

இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதிய கதையைப் படமாக்குகிறார்.

இந்த நிலையில், இப்படத்திற்கு பாலன் தி பாய் எனப் பெயரிட்டுள்ளதைப் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். படத்திற்கு சுஷின் ஷியான் இசையமைக்க, சிஜு காலித் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதையும் படிக்க: கூலி வசூல் எவ்வளவு?

director chidambaram's new film titled as balan the boy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

SCROLL FOR NEXT