ஆஸ்கர் விருதுவென்ற இயக்குநர் அலெஹான்ட்ரோ இனாரிட்டு பட வாய்ப்பை ஃபஹத் ஃபாசில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஃபஹத் ஃபாசில் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார். இவர் நடிக்கும் படங்களில் தன் தனித்துவமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி கதையைப் பலப்படுத்திவிடுவார்.
அதனாலேயே, பல நுட்பமான திரைக்கதைகளுக்கு ஃபஹத் அழைக்கப்படுகிறார். இறுதியாக, நடிகர் வடிவேலுவுடன் இணைந்து மாரீசன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக, இவர் நடிப்பில் ஓடும் குதிர சாடும் குதிர வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஃபஹத் ஃபாசில், “இயக்குநர் அலெஹான்ட்ரோ கோன்சாலஸ் இனாரிட்டு இயக்க இருந்த ஒரு திரைப்படத்திற்கு நடிகராகத் தேர்வானேன். என் நடிப்பு அவருக்குப் பிடித்திருந்தது. ஆனால், அவர்கள் பேசுவதுபோல் மொழி உச்சரிப்பு எனக்கு வரவில்லை.
இதற்காக, அமெரிக்காவில் 4 மாதங்கள் பயிற்சி எடுக்க வேண்டும்; அதற்கான செலவையும் அவர்கள் தர மறுத்தார்கள். உச்சரிப்புக்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா? என அப்படத்திலிருந்து விலகினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அலெஹான்ட்ரோ இனாரிட்டு ஆமரோஸ் பெரோஸ் (Amores Perros) ஃபேர்ட் மேன் (Birdman), தி ரெவனெண்ட் (The Revenant) உள்ளிட்ட படங்களை இயக்கி ஆஸ்கர் விருது வென்றவர். அடுத்ததாக, நடிகர் டாம் க்ரூஸை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். ஃபஹத் ஃபாசில் இப்படத்திலிருந்துதான் விலகியிருப்பார் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: மாரீசன் ஓடிடி தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.