கூலி திரைப்படத்தின் அனுபவம் குறித்து நடிகர் சௌபின் சாகிர் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
அத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நாகர்ஜூனா, சௌபின், ரச்சிதா ராம் கதாபாத்திரங்கள் பேசப்பட்டன.
இந்த நிலையில், நடிகர் சௌபின் சாகிர் இன்ஸ்டாகிராமில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஆமீர் கானுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “சில நேரங்களில் சினிமா என்பது கனவுகளுக்கு அப்பாற்பட்டது. கூலி படமும் தயாள் கதாபாத்திரமும் எப்போதும் எனக்கு நெருக்கமாக இருக்கும். உங்கள் அன்புக்கும் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சரியான புரமோஷன் இல்லை... புலம்பும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.